உலக நாயகன் கமலஹாசன் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஒவ்வொரு படத்தின் கதையை நன்கு ஆராய்ந்து நடிப்பது வழக்கம். படத்தில் நடிக்கும் போது இயக்குனர்கள் கதையை மாற்றி எடுத்தால் கூட நடிகர் கமல் சரியாக கண்டுபிடித்து விடுவாராம் அந்த அளவிற்கு கதையை நுட்பமாக அறிந்து வைத்திருப்பாராம்.
மேலும் கதையில் ஏதாவது சரியில்லை என்றால் கூட புது புது ஐடியாக்களை கொடுப்பதும் கமலஹாசன் ஸ்டைல் என சொல்லப்படுகிறது. கமல் படங்களில் தேவைக்கு ஏற்ப மட்டுமே முத்த காட்சிகள் அதுபோன்ற சீன்கள் இருக்கும் தேவையில்லாமல் நடிக்கவும் மாட்டார் அந்த மாதிரி சீன்கள் இருந்தால் கூட எடுக்க சொல்லி விடுவாராம் இப்படி இருப்பதால் அவரது படங்கள் மோசமான விமர்சனத்தை பெறுவதே கிடையாது.
ஆனால் ஒரே ஒரு படம் அவருக்கு மோசமான விமர்சனத்தை பெற்று கொடுத்துள்ளது அது என்ன என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம். 1993 ஆம் ஆண்டு ஜி என் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான படம் தான் மகராசன். இந்த படத்தில் கமல், பானுப்பிரியா, பிகே ராமசாமி, ரமேஷ் அரவிந்த் மற்றும் பலர் நடித்து இருந்தனர் இந்த படம் சென்னை லோக்கல் பாஷை மையமாக வைத்து உருவாக்கியது இந்த படத்திற்கு சம்பளம் வாங்காமல் நடித்திருந்தார் கமல்.
இந்த படத்திற்கு முன்பாக ஜி என் ரங்கநாதன் கமலை வைத்து மீண்டும் கோகிலா, கல்யாண ராமன், கடல் மீன்கள் உட்பட படங்களை இயக்கியுள்ளார் அந்த காரணத்தினால் அவர் மீது மதிப்பும், மரியாதையும் அதிகமாக இருந்தது அதன் நாள்தான் இந்த படத்திலும் நடிக்க ஒத்துக்கொண்டாராம் அப்படி கிடைத்த இந்த வாய்ப்பை இயக்குனர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை..
கமலை விட ஹீரோயின் பானுப்ரியாவுக்கு அதிகம் முக்கியத்துவம் இருந்தது இதுதான் படத்தின் தோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது மிகவும் மோசமான கதை என்று பெயர் வாங்கிய இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை.. கமலுக்கு மே இந்த படம் மரண அடியை கொடுத்ததாக கிசுகிசுக்கப்பட்டது.