பணி நீக்கம் செய்யப்பட்ட ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு காரை பரிசாக வழங்கிய கமலஹாசன்.!

kamal hassan
kamal hassan

கோவை சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு மக்கள் நீதி மையம் தலைவரும் நடிகருமான கமலஹாசன் அவர்கள் காரை பரிசாக அளித்திருக்கிறார். அதாவது சில காலங்களாக சோசியல் மீடியாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒன்றுதான் கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஷர்மிளா. கோவையின் முதல் பெண் ஓட்டுனர் ஆன ஷர்மிளா பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

ஓட்டுனர் ஷர்மிளாவை பாராட்டும் விதமாக திமுகவைச் சேர்ந்த கனிமொழி எம்பி கடந்த 24ஆம் தேதி ஷர்மிளா ஓட்டி வந்த பேருந்தில் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பயணம் செய்தார். பயணத்தின் பொழுது எம்பி கனிமொழி ஷர்மிளாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் பேருந்தின் உரிமையாளர் விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக கூறி ஷர்மிளாவை பணிநீக்கம் செய்து விட்டதாக தகவல் வெளியானது.

எனவே இதனை அடுத்து கனிமொழி எம்பி அவரை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறி பேருந்து உரிமையாளரிடம் பேசி வேலையை வாங்கி தருவதாக கூறியுள்ளார். ஆனால் இதற்கு ஷர்மிளா மறுப்பு தெரிவித்த நிலையில் ஆட்டோ ஓட்டப் போவதாகவும் கூறியுள்ளார் எனவே அதற்கு தேவையான பண உதவி மற்றும் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறியிருக்கிறார்.

kamal hassan
kamal hassan

இந்நிலையில் பெண் ஓட்டுனர் ஷர்மிளா மற்றும் அவரது பெற்றோரை நேரில் சந்தித்த மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் அவர்கள் Maruti Suzuki Ertiga காருக்கான முன் பணத்தை பரிசாக கொடுத்துள்ளார். இது குறித்து கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் முதல் பெண் ஓட்டுனர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுனராக இருந்தவர் ஷர்மிளா எனக்கூறி உள்ளார்.

இவ்வாறு பேருந்து ஓட்டுனராக வேண்டும் என தன்னுடைய கனவிற்காக உழைத்து சவாலான பணியை மேற்கொண்டு வந்த ஷர்மிளாவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். இவ்வாறு கமல் ஷர்மிளாவிற்கு காரை பரிசாக வழங்கியிருக்கும் நிலையில் இதன் மூலம் மேலும் உயர்வார் என பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.