ROLEX கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்த சூர்யாவுக்கு சிறப்பான பரிசை கொடுத்து அழகு பார்த்த உலகநாயகன் கமலஹாசன்.!

kamal-and-surya
kamal-and-surya

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கநகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் விக்ரம் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தற்போது சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய்சேதுபதி, நரேன், சூர்யா ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தி உள்ளது.

விக்ரம் திரைப்படம் 5 நாள் முடிவில் மட்டுமே சுமார் 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வசூல் வேட்டை தொடர்ந்து நடத்திவருகிறது விக்ரம் திரைப்படம் இப்படி ஓடிக் கொண்டிருக்கின்ற நிலையில் படத்தின் வெற்றியை முன்னிட்டு உலக நாயகன் கமலஹாசன்  டிவிஎஸ் அப்பாச்சி பைக்  உதவி இயக்குனர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார் .

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜிக்கு 80 லட்சம் மதிப்புள்ள ஒரு சொகுசு காரை நள்ளிரவு 5 மணிக்கு பரிசு கொடுத்து அசத்தியுள்ளார். தொடர்ந்து  படக்குழுவினருக்கு பரிசு கொடுத்து அசத்திய நிலையில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்து சூர்யாவை அண்மையில் நேரில் சந்தித்து அவருக்கும் பரிசு கொடுத்துள்ளார் நடிகர் கமல்.

விக்ரம் திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடங்களில் மிரட்டி விட்ட சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார் இதன் மதிப்பு சுமார் 23 லட்சத்தை விட அதிகம் என கூறப்படுகிறது.

இதனால் விக்ரம் படத்தில் நடித்த நடிகர்களும் சரி பணியாற்றிய படக்குழுவினரும் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர் இவர்களை விட உலகநாயகன் கமலஹாசன் மிகப்பெரிய சந்தோஷத்தில் இருக்கிறாராம் ஏனென்றால் தொடர்ந்து வசூல் வேட்டை கண்டு வருவது அவருக்கு தற்போது பலமடங்கு காசை அள்ளி குவிகிறதாம் ஏனென்றால் இந்த படத்தை தயாரித்தது கமல்.