டைட்டில் வின்னர் பட்டதை “அசீம்” பெற்றது கமலஹாசனுக்கு பிடிக்கவில்லை.. உண்மையை போட்டு உடைத்த போட்டியாளர்.!

bigboss-6-
bigboss-6-

விஜய் டிவி தொலைக்காட்சியில் பாப்புலரான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். அண்மையில் இதன் ஆறாவது சீசன் தொடங்கப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி வெற்றிகரமாக முடிந்தது இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பிக்பாஸ் வீட்டில் ஜி.பி. முத்து தான் முதலில் என்ட்ரி கொடுத்தார்.

இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல சப்போர்ட் இருந்தது. பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை இவர்தான் பெறப்போகிறார் என அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது ஆனால் திடீரென ஜி.பி. முத்து தனது சொந்த காரணங்களால் வெளியேறினார் அதன் பிறகு ஒவ்வொரு போட்டியாளரும் வாரவாரம் நடத்தப்படும்.

எலிமினேஷன் ரவுண்டில் குறைந்த வாக்குக்கள் வாங்கி வெளியேறினர் கடைசி மூன்று இடத்தை அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் பிடித்தனர். ஜனவரி 22 ஆம் தேதி உலகநாயகன் கமலஹாசன் டைட்டில் வின்னர் அசீம் என தெரிவித்தார் அதன் புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலானது.

இரண்டாவது இடத்தை  விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவின்னும் பிடித்தனர். முதல் இடத்தை பிடித்த அசீமுக்கு 50 லட்சம் பணம் மற்றும் பிக்பாஸ் வீட்டில் 100 நாள் இருந்ததற்காக பல லட்சம் பணம் அதுமட்டுமில்லாமல் புதிய கார் ஒன்றும் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. அசீமுக்கு பலரும் ஆதரவு கொடுத்த நிலையில் ஒரு சிலர் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.

bigboss
bigboss

ஒரு ரசிகர் மட்டும்  புகைப்படத்தை வெளியிட்டு கமலஹாசனுக்கு அசீம் வெற்றி பெற்றது பிடிக்கவில்லை.. அவர் சில காரணத்தால் தான்  வெற்றியாளரை அறிவித்தார் இந்த புகைப்படம் அதனை வெளிப்படுத்துகிறது என கூறி கமெண்ட் அடித்திருந்தார். இதை பார்த்த பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர் மகேஸ்வரியும் அந்த பதிவு உண்மை என கூறி உள்ளார்.