தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தயாராவதற்கு வரிசை கட்டி நிற்கிறது அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி கலவை விமர்சனங்களுக்கு இடையே வெளியாகி தற்போது வரையிலும் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது.
இந்த படத்தினை அடுத்து நடிகர் விஜய் தன்னுடைய 67வது படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் சில திரைப்படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் கூட அந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.
எனவே தளபதி 67 படம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கணகராஜ் தளபதி 67 திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில் அவர் பிப்ரவரி 1,2,3 என கூறிய நிலையில் தினங்களில் என்ன வெளியாக இருக்கிறது என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் சேயர் பாபு சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்று இருக்கு பேட்டி அளித்த நிலையில் அதில் ஏராளமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது பிப்ரவரி 1, 2, 3 இந்த தினங்களில் தளபதி 67 படம் குறித்த சின்ன டீசர் வெளியாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
மேலும் இதனை அடுத்து தளபதி 67 திரைப்படத்தில் கமலஹாசன் அவர்கள் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாகவும் பிறகு அந்த படத்தின் ஒரு வரி கதையை கேட்டு விட்டு 20 நிமிடங்கள் நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டுள்ளார் எனவே இதற்கு லோகேஷ் கனகராஜ் ஒத்துக்கொள்ள தளபதி 67 திரைப்படத்தில் 20 நிமிட காட்சியில் கமலஹாசன் அவர்கள் நடிக்க இருக்கிறார் என அவர் கூறிய தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.