“சந்தானம்” கதாபாத்திரத்தில் மிரட்டியதற்காக மறக்க முடியாத பரிசை கொடுத்த கமல் – இணையதளத்தை கலக்கும் புகைப்படம்.

kamal
kamal

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியாகிய திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, டினா என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்து அசத்தி இருந்தது. இந்த படம் வித்தியாசமான கதைக் களமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் இந்தப் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

இது வரை மட்டுமே விக்ரம் திரைப்படம் 350 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வருவதால் படக்குழு மிகுந்த  சந்தோஷத்தில் இருந்து வருகிறது. ஆரம்பத்திலேயே உலக நாயகன் கமலஹாசன் இயக்குனர், உதவி இயக்குனர், சூர்யா போன்றவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து அழகு பார்த்தார்.

அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு விக்ரம் படத்தின் வெற்றி விழாவை பிரஸ்மீட் வைத்து கொண்டாடியது விக்ரம் படக்குழு.  பிரஸ் மீட் முடிந்தவுடன் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் 40 வகையான செட்டிநாடு வகை உணவு பரிமாறப்பட்டது அதன் புகைப்படங்கள் கூட இணையதளத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகியது.

இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் படத்தில் இருந்து ஒரு சூப்பரான செய்தி வெளிவந்துள்ளது அதாவது படத்தில் நடித்த மற்றும் பணியாற்றிய இயக்குனர்களுக்கு பரிசுப் பொருட்களை கமல் கொடுத்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் ஆனால் விஜய் சேதுபதி, அனிருத் போன்றவர்களுக்கு ஒன்றுமே கொடுக்கவில்லை என கூறப்பட்டது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் படத்தின் வெற்றி விழாவின்போது விஜய் சேதுபதி அனிருத் போன்ற பிரபலங்களுக்கு முத்தம் கொடுத்தார். அதுதான் அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு பரிசாக பார்க்கின்றனர்.