விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து தற்பொழுது சினிமாவில் பிஸியாக இருந்து வரும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் அஸ்வின். இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அஸ்வின்.
இவ்வாறு பட்டித் தொட்டி எங்கும் பிரபலம் அடைந்த இவர் பிரஸ் மீட் ஒன்றில் 40 கதையை கேட்டு தூங்கி விட்டேன் என்று கிண்டல் அடித்து பேசினார். இது பெரும் சர்ச்சையாக மாறியது இதன் காரணமாக இவருடைய நடிப்பில் வெளிவந்த என்ன சொல்லப் போகிறாய் திரைப்படம் தோல்வி அடைந்தது இதனை தொடர்ந்து இணையதளத்திலும் தொடர்ந்து நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு வந்தார் அஸ்வின்.
இவ்வாறு தன்னுடைய வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் எப்படியோ ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டோம் என்று திமிரின் உச்சத்திற்கு சென்றதால் இவ்வாறு இவருடைய பெயர் டேமேஜ் ஆனது. மேலும் இவருக்கு பெரிதாக படங்களை நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது பிரபு சாலமன் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் அதாவது அவருடைய இயக்கத்தில் உருவாக இருக்கும் செம்பி படத்தில் அஸ்வின் நடிக்க இருக்கிறாராம்.
மேலும் இவரைத் தொடர்ந்து இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கோவை சரளா நடிக்க இருப்பதாகவும் பிரபு சாலமனின் அனைத்து படங்களிலும் நடித்து வரும் தம்பி ராமையா இந்த படத்திலும் நடிக்க இருக்கிறாராம். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் இசையா வெளியிட்டு விழா ஒன்றில் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் கலந்து கொண்டார்.
ஏனென்றால் கமல் அவர்கள் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் அஸ்வினின் அடுத்த படத்தினை தயாரிக்க இருக்கிறார் தற்பொழுது இளம் நடிகர்களின் படங்களை தயாரிப்பதில் கமல் ஆர்வமாக இருந்து வருகிறார். இவ்வாறு நடிகர் கமல் அவர்கள் நல்ல வாய்ப்பை அஸ்வினுக்கு கொடுத்து இருக்கும் இல்லை இதற்கு மேலாவது வாயை பூட்டி வைத்துக் கொண்டால் நல்லது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.