உலகநாயகன் கமலஹாசன் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் முதல் முறையாக கைகோர்த்து நடித்துள்ள திரைப்படம் தான் விக்ரம் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாக்கியதால் கமலுக்கு நிகரான நடிகர்களை படத்தில் இழுத்துப் போட்டார்.
அந்த வகையில் இந்த படத்தில் கமலை எதிர்த்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். படத்தில் இருந்து இதுவரை வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பத்தல பத்தல பாடல், டைலர் என அனைத்தும் மிரட்டும் வகையில் இருந்ததால் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் அலை மோதுகின்றன.
படம் வெளிவருவதற்கு முன்பாக கமல் குறித்தும் படம் குறித்தும் தொடர்ந்து பேட்டிகளில் சொல்லி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அண்மையில் பேட்டி ஒன்றில் அவர் சொன்ன சுவாரசிய தகவல்களை கேட்டு ரசிகர்களே ஆச்சரியப்பட்டு போய் இருக்கின்றனராம்.
விக்ரம் படப்பிடிப்புத் தளத்தில் கமலுக்கு நான் 32 நாட்கள் மேக்கப் போட்டேன் என கூறினார். பொதுவாக கமல் அவரது படத்தில் அவரே தான் மேக்கப் போடுவார் அப்படி இல்லை என்றால் அவரது குழுவை சார்ந்தவர்களை மேக்-அப் போட சொல்வார் யாருக்கும் அனுமதி கொடுக்க மாட்டார்.
ஆனால் விக்ரம் படத்தில் நான் செய்தேன் அது என்னால் மறக்க முடியாத ஒன்று என கூறினார். நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள் அதை நான் விக்ரம் படத்தில் பல தடவை பார்த்து மிரண்டு போய் உள்ளேன் இந்த வயதிலும் இப்படி ஒரு நடிகரா இதை பல இளம் நடிகர்கள் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும் என கூறினார்