இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஜெகநாதனின் நாவலை தழுவி சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் நடித்துள்ளார் இந்த படமும் அவருக்கு ஒரு பிளாக்பஸ்டர் மூவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் போஸ்டர் ஏற்கனவே சோசியல் மீடியாவில் வெளியாகியது அதில் சிம்பு அதிக அளவு உடல் எடையை குறைத்து மிக ஒல்லியாக நடித்துள்ளார் என தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியாகியது.
அதில் கமலஹாசன், உதயநிதி ஸ்டாலின், ஏ ஆர் ரகுமான், கௌதம் வாசுதேவ் மேனன், ஐசரி கணேஷ், சிம்பு போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அதேபோல கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற இடங்களில் உரிமையை ராஜ்கமல் பிலிம்ஸ் வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐசரி கணேஷ் வைத்திருந்தார்.
கமலும் மௌனமாக சிரித்தார். நடிகர் கமலஹாசன் இதற்கு முன் விக்ரம் திரைப்படத்தில் நடித்து தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து பல படங்களை தயாரித்து அதன் மூலமும் லாபம் பார்த்து வருகிறார் கமலஹாசன் இதனால் பல நிகழ்ச்சிகளிலும் தற்போது கலந்து கொண்டு வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் சிம்பு கமலிடம் நீங்கள் நடித்த படங்களில் ஏதாவது ஒன்றை நான் ரீமேக் செய்து நடித்தால் எந்த படமாக இருக்கும் என கேள்வி கேட்டுள்ளார் அதற்கு கமல் நீங்கள் எல்லா படத்திலும் நடிக்க வேண்டும் மற்றும் என்னுடனும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். அப்போது ஐசரி கணேஷ் அந்த படத்தை நான் தான் தயாரிப்பேன் என பேசி உள்ளார். இதன் மூலம் சிம்பு மற்றும் கமல் இணையும் அடுத்த பட அப்டேட்டை தெரிவித்துள்ளனர்.