அஜித்தை அட்ட காப்பி அடிக்கும் கமல்.! இதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும்.. பாராட்டும் தயாரிப்பாளர்கள்..

ajith-kamal
ajith-kamal

லிங்குசாமி தயாரிப்பில் கமலஹாசன் நடித்த உத்தம வில்லன் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியாகிய வசூல் ரீதியாக மிகப்பெரிய சரிவை சந்தித்தது இந்த சரிவை ஈடு கட்டுவதற்காக லிங்குசாமி தயாரிப்பில் கமல் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொதுவாக சினிமாவில் ஒரு தயாரிப்பாளரின் திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் நடித்தால் அந்த திரைப்படம் தோல்வி அடைந்து விட்டால் அவர்களை கண்டு கொள்ளவே மாட்டார்கள் இதுதான் பல நடிகர்கள் செய்து வரும் முட்டாள்தனம் ஆனால் இதற்கு மாறாக அஜித் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த திரைப்படம் எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்தால் மீண்டும் மீண்டும் அந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் திரைப்படத்தில் அஜித் நடித்துக் கொடுப்பார்.

அப்படி அந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் வெற்றியடைவதால் அவர்களுக்கும் மகிழ்ச்சி அஜித்திற்கு மகிழ்ச்சி இதுதான் அஜித் இதுவரை பின்பற்றி வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கமல் மீண்டும் லிங்குசாமி திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. லிங்குசாமி தயாரிப்பில் கமலஹாசன் நடித்த உத்தம வில்லன் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியாகியது.

இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் சரிவை சந்தித்தது இந்த திரைப்படத்தின் நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காகவே மீண்டும் லிங்குசாமி தயாரிக்கும் திரைப்படத்தில் கமலஹாசன் நடிக்க இருப்பதாக  கமலஹாசனே அறிவித்துள்ளார்.

இதுகுறித்து லிங்குசாமி அவர்கள் கூறியதாவது உத்தமவில்லன் திரைப்படத்தை மிகவும் திறமையாகவும் கடின உழைப்போடு தான் எடுத்தோம் ஆனால் அந்தத் திரைப்படம் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது உண்மைதான். முதன்முதலில் நாங்கள் பாபநாசம் திரைப்படத்தை தான் தயாரிக்க முடிவு செய்தோம் ஆனால் கமலஹாசன் ஆசைப்பட்டதால் தான் உத்தமவில்லன் திரைப்படத்தை எடுத்தோம்.

இது அவருக்கே தெரியும் அதனால்தான் கமலஹாசன் இந்த திரைப்படத்தின் நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடித்து தருகிறேன் என்று கூறியுள்ளார் இதுபோல் மற்ற நடிகர்களும் முடிவு எடுத்தால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் என்பதே கிடையாது அதனால் சினிமாவும் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கும்.

Lingusamy
Lingusamy

ஏற்கனவே அஜித் ஒரு தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்தால் அதனை ஈடுகட்ட அடுத்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அதேபோல் தற்பொழுது கமலஹாசனும் பின்பற்றி வருகிறார் என்பதை நினைத்து சினிமா பிரபலங்கள் தயாரிப்பாளர்கள் பெருமைப்பட்டு வருகிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜகன் விஜயா இயக்கியுள்ள பிகினிங் படத்தை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் பிகினிங் திரைப்படம் புதிய அனுபவத்தை கொடுக்கும் இனிமேல் திரைப்படங்களை தொடர்ந்து எடுப்போம் புதிய திரைக்கதை தயார் செய்துள்ளேன் இரண்டு மூன்று மாதங்களில் அந்த திரைப்படத்தை இயக்குவேன் என லிங்குசாமி கூறியுள்ளார்.