இப்போ 130 கோடி சம்பளம் வாங்கும் கமல். முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

kamal
kamal

Kamal : நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் திரை உலகில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இருபின்னும் விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு நான்கு வருடங்கள் சினிமா உலகில் நடிக்கவே இல்லை..

இந்த நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் கதையை சொல்ல அது அவருக்கு ரொம்ப பிடித்து போகவே ஓகே சொன்னார். படத்தில் நடித்ததையும் தாண்டி தயாரிக்கவும் செய்தார் படம் சிறப்பாக வந்ததை அடுத்து தமிழ்நாடு, மும்பை என பல இடங்களுக்கு சென்று  படத்தை பிரமோஷன் செய்தார்.

இதனால் படம் வெளிவந்து மூளை முடுக்கெங்கும் நல்ல வரவேற்பு பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது அதனை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் 90 வயது கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்திற்கு கமல்  கைவசம் கல்கி, மணிரத்தினதுடன் ஒரு படம், ஹச் வினோத்துடன் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படம் பண்ண இருக்கிறார்.  இதனால் அடுத்த மூன்று வருடத்திற்கு பிஸியான ஹீரோவாக கமலி பார்க்கப்படுகிறார் தற்பொழுது ஒரு படத்திற்கு சுமார் 130 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல் படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.கமல் முதல் முதலில் நடித்த திரைப்படம் களத்தூர் கண்ணம்மா இந்த படத்தில் நடித்ததற்காக அவர் சம்பளமாக 500 ரூபாய் வாங்கினார் என கூறப்படுகிறது. பிறகு படிப்படியாக முன்னேறி தற்போது இந்த இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.