கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா இவர் சமீபத்தில் ஜெய்பீம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி அமேசான் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.
அந்த வகையில் இந்த திரைப்படம் உருவான நேரத்தில் இருந்து தற்போது வரை பல்வேறு பிரச்சனைகளும் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு பெயரை குற்றவாளி கதாபாத்திரத்தில் வைத்தது மட்டும் இல்லாமல் வன்னிய சமுதாயத்தின் அடையாளமான அக்னி கலசத்தையும் இந்த திரைப்படத்தில் காட்டி உள்ளார்கள்.
சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்திற்கு பாமக மற்றும் வன்னியர் சங்கம் என இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தற்போது இதன் காரணமாக சூர்யாவின் வீட்டில் துப்பாக்கி ஏந்திய காவல் அதிகாரிகள் அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அந்தவகையில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம் திரைப்படத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது அப்பொழுது கமலுக்கு ஆதரவாக தன்னுடைய குடும்பத்துடன் சிவகுமார் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கமலுக்கு ஆதரவாக பேசி இருந்தார் ஆனால் கமல் ஜெய் பீம் திரைப்படம் குறித்த சர்ச்சைக்கு கைமாறாக எந்த ஒரு சிறு உதவியும் செய்யவில்லை.
அதுமட்டுமில்லாமல் சமூக நலன் கருதி எப்பொழுதும் சர்ச்சையை எதிர்த்து குரல் கொடுக்கும் சீமான் கூட இந்த விவகாரத்தில் ஈடுபடவில்லை அந்த வகையில் இவர் நடிகராக பேசாவிட்டாலும் நாம் தமிழர் கட்சியின் தலைவராக ஏதேனும் பேசியிருக்கலாம் இதனால் சூர்யா மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள்.