விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான் கஞ்சா கருப்பு. இவர் சமீபத்தில் பிக்பாஸ் குறித்து பேட்டியளித்துள்ள நிலையில் அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் கஞ்சா கருப்பு இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா ஆகியவர்களின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியினை பெற்ற பிதாமகன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.
இந்த படத்தினை தொடர்ந்து ராம், சிவகாசி, சண்டக்கோழி, திருப்பதி, தாமிரபரணி, பருத்திவீரன், அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் படத்தை தயாரிப்பதாக இறங்கி மொத்த பணத்தையும் இழந்துவிட்டார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கஞ்சா கருப்பு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து தற்பொழுது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் குறித்து பேட்டியளித்துள்ளார் அதற்கு தலைமை ஆசிரியராக தான் உலகநாயகன் இருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் நடிப்பதை விட இயல்பாக இருந்தாலே கமல் ஐயா நல்ல உயரத்துக்கு கொண்டு போவார் கமல் ஐயா பிக்பாஸ் அய்யாவும் அதை கவனித்து மார்க் போடுவார்கள் இங்கிருந்து அங்க போனதில் சில பேர் அங்கே ஓவராக நடிக்கிறார்கள். கமல் ஐயாவுக்கு அது பிடிக்காது நேர்மையாக இருந்தால் எதிர்காலம் உண்டு கமல் சார் நினைத்தால் அது என்ன நடக்கும் நான் முதன் முதலாக அங்கே போனதும் அவ்வளவு கேமராக்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியமானேன்.
ஆனால் அந்த வீட்டில் இருந்து விட்டால் வேறு எந்த சூழ்நிலையும் சமாளித்து விடலாம். நான் இருந்த சீசனில் என் கூட இருந்த அத்தனை பேருடனும் இன்னும் தொடர்பில் இருக்கிறேன் நேரம் கிடைக்கும் பொழுது ஒருத்தரை ஒருத்தர் சந்தித்து கொள்கிறோம். அந்த சீசனில் சினேகனுக்கு அவார்டு கிடைத்திருக்கணும் ஆனால் ஆராவிற்கு கிடைத்தது.
கமல் சார் நடத்தினால் தான் பிக்பாஸ் நல்லா இருக்கும் மறுபடியும் கூப்பிட்டால் கூட போகமாட்டேன் ஏன்னா என்னுடைய தொழில் நடிப்பு அதில் கவனம் செலுத்தணும் என்று விரும்புகிறேன் சினிமாவில் நடிக்கணும் என்று தான் சென்னை வந்தேன் பிக்பாஸில் போகணும்னு வரவில்லை நான் ஓடுற குதிரையாய் இருக்க விரும்புகிறேன் ஓடும்பொழுது திரும்பி பார்த்தால் பின்னாடி வருபவர்கள் நம்மை தள்ளிவிட்டு போய்விடுவார்கள் என்று மிகவும் வேடிக்கையாக பேசிவுள்ளார்.