ஜெமினிகணேசனும் சாவித்திரியுடன் ஒரு சின்னஞ்சிறு வயது பையனின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
ஜெமினிகணேசனும் சாவித்திரியும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் இருவருக்கும் காதல் வசப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
அவர்கள் இரண்டு பேருமே அந்த காலத்திலேயே நிறைய திரைப்படங்கள் நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் 2 பேரும் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் களத்தூர் கண்ணம்மா அந்தப் படத்தில் ஒரு சிறுவன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பான்.
அந்த சிறுவன் தான் உலக நாயகன் கமல்ஹாசன் அப்போது அந்த திரைப்படத்தில் கமல்ஹானை ஜெமினி கணேசன் தூக்கி வைத்திருப்பார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வேகமாக பரவி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தில் இருப்பது உலகநாயகன் கமல்ஹாசனா என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருவது மட்டுமல்லாமல் கமல்ஹாசன் அந்த காலத்திலேயே இந்த திரைப்படத்தில் நடித்து இருக்கிறாரா என்று வியந்து இருக்கிறார்கள்.