தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரை நடித்thu ஓடுகின்றனர் ரஜினி மற்றும் கமல். குறிப்பாக ரஜினி தனது பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரையிலும் நிறுத்தாமல் வருடத்திற்கு ஒரு படத்தையாவது கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனால் ரஜினியின் மார்க்கெட்டும் குறையாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது அதன் காரணமாகவே சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பிடித்து நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கிறார். ரஜினி இப்பொழுது தனது 169 ஆவது படமான ஜெயிலர் படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.
ரஜினியை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசனும் தற்பொழுது படங்களில் நடிக்கஅதிகம் ஆர்வம் காட்டுகிறார். விக்ரம் படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் இந்தியன் 2 தேவர்மகன்-2 போன்ற படங்களில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் ரஜினி மற்றும் உலக நாயகன் கமலஹாசன் குறித்து கலா மாஸ்டர் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொன்னது : உலகநாயகன் கமலஹாசன் தனது திறமையை அதிகம் வெளிகாட்டக் கூடியவர் ஆம் அவரிடம் ஒரு செயலை சொன்னால் போதும் அதை செய்து காட்டக் கூடியவர்.
அவருக்கு ஏகப்பட்ட டேலண்ட் இருக்கு என கூறினார் ஆனால் ரஜினி குறித்த அவர் சொன்னது ரஜினிக்கு நிறைய டேலண்ட் இருக்கு ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார் ஆரம்பத்தில் எப்படி புது முகநடிகர் போல இருந்தாரோ அதேபோலத்தான் தற்பொழுதும் ஒன்னும் தெரியாதது போல உட்கார்ந்து இருப்பார் ஆனால் அவரிடம் பல டேலண்ட் இருப்பதாக கலா மாஸ்டர் பேட்டியில் தெரிவித்தார்.