மரணப்படுக்கையில் இருந்த ஸ்ரீவித்யா.. கடைசி ஆசையை நிறைவேற்ற ஓடோடி வந்த கமல்.! கண்ணீரில் மிதந்த தருணம்

kamal-srividya
kamal-srividya

தமிழ் சினிமாவில் நடிகர் கமலஹாசன் உச்ச நடிகராக வலம் வருபவர் இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன அது மட்டும் இல்லாமல் ஒரு காலகட்டத்தில் நடிகர் கமலுடன் நடிக்க  பல நடிகைகள் ஆசைப்படுவார்கள் அதே போல் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை ஒரு முறையாவது முத்தக் காட்சியில் நடிக்க வைத்து விடுவார் கமல்.

அதேபோல் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் ஸ்ரீவித்யா இவர் தமிழை தாண்டி பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தவர். புகழின் உச்சத்தில் இருந்த இவரை புற்றுநோய் தாக்கியது அதுமட்டுமில்லாமல் ஸ்ரீவித்யா கடந்த 2006 ஆம் ஆண்டு புற்றுநோயால் மிகவும் அவஸ்தை பட்டார்.

2006 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார் ஸ்ரீவித்யா இவரின் மரணம் சினிமா உலகினரை உலுக்கியது ஸ்ரீவித்யா தன்னுடைய இறுதி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் அதாவது மரண படுக்கையில் இருந்த பொழுது பலரையும் சந்திக்க மறுத்துள்ளாராம். ஆனால் அவருக்கு ஒரே ஒரு ஆசை கடைசி ஆசை இருந்ததாம் கடைசியாக ஒருமுறை கமலஹாசனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது.

ஸ்ரீவித்யாவின் நிலைமையை அறிந்த கமலஹாசன் உடனடியாக ஓடோடி வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ஸ்ரீவித்யாவை சந்தித்துள்ளார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஸ்ரீவித்யாவை பார்த்து கமல் கண்ணீர் விட்டு அழுததாக கூறப்படுகிறது.

அவரின் கடைசி ஆசை கமலை பார்க்க வேண்டும் என்பதை கமல் நிறைவேற்றியே விட்டார்.