Bigg Boss: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் இந்நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்க இருக்கிறது. எனவே இதன் காரணமாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கும் பணி பெற்று வரும் நிலையில் நடிகர் கமலஹாசன் பிரபல நடிகர் ஒருவருக்கு போன் செய்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்க ஆனால் அந்த நடிகை முடியாது என கூறி உள்ளாராம்.
அது குறித்த தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்பொழுது திரைப்படங்களில் நடித்து வருபவர்கள் பலரும் இருக்கின்றனர்.
அதேபோல் இந்நிகழ்ச்சியினால் தங்களது மொத்த மார்க்கெட்டையும் இழந்திருப்பவர்களும் இருக்கிறார்கள். எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு தற்பொழுது அனைவரும் தயக்கம் காண்பித்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் 6சீசன்கள் மிகவும் வெற்றிகரமாக முடிந்திருக்கும் நிலையில் 7வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது.
எனவே இதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளார்கள். யாரெல்லாம் இந்த சீசனில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் பெரிதாக பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் வெளிநாட்டில் செட்டிலான பிரபாஸ் பல வருடங்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். எனவே இதனை பார்த்த கமல் அப்பாஸ்க்கு போன் செய்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அது எனக்கு செட்டாகாது அது எனக்கூறி மறுத்துவிட்டேன் என அப்பாஸ் கூறியுள்ளார்.