ரூபாய் 600 கோடி பட்ஜெட் படத்தில் வில்லனாக களமிறங்கும் கமல்.! சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அதிகாரப்பூர்வமான தகவல் இதோ..

kamal hassan
kamal hassan

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கமலஹாசன் அவர்கள் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவருடைய திரைப்படங்கள் வெற்றினை கண்டு வரும் நிலையில் இவருடைய சம்பளம் ஒவ்வொரு படத்திற்கும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஆறு வருடங்களாக தொகுத்து வழங்கி வரும் நிலையில் தற்பொழுது ஏழாவது சீசனிலும் தொகுப்பாளராக பணியாற்ற இருக்கிறார் எனவே இதற்காக 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு இது ஒரு புறம் இருக்க மறுபுறம் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இதனை அடுத்து ஹெச் வினோத் இயக்கத்தில் தன்னுடைய 233வது படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நடிப்பது ஒருபுறம் இருந்தாலும் தொடர்ந்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தயாரிப்பிலும் ஆர்வம் காமித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்து சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசன் பிரம்மாண்டமாக ரூபாய் 160கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ என்னும் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது. மேலும் இது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகாமல் இருந்து வரும் நிலையில் தற்போது அது குறித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடித்து வரும் நிலையில் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார். மேலும் திஷா பாட்னி மற்றும் அமிதாப் பச்சன் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக கமலஹாசன் அவர்கள் நடிக்க இருக்கும் நிலையில் இது குறித்து படக் குழு அதிகாரப்பூர்வமான தகவலை அறிவித்துள்ளது. இவ்வாறு இந்த படத்தில் வில்லனாக கமலஹாசன் அவர்கள் நடிக்க இருக்கும் நிலையில் இதற்காக ரூபாய் 150 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் எனவும் கூறப்படுகிறது.