இரவு பார்ட்டியில் அமர்க்களம் பண்ணிய கமல் – விஜய்.! ட்ரெண்டிங் ஆகும் வீடியோ.!

kamal
kamal

நடிப்பிற்கு பெயர்போன உலகநாயகன் கமலஹாசன் கடந்த சில வருடங்களாக அரசியல் வியாபாரம் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் படங்களில் நடிக்காமல் போனார் ஒரு வழியாக லோகேஷ் கனகராஜ் சொன்ன ஆக்சன் திரைப்படம் கமலுக்கு ரொம்ப பிடித்துப் போகவே..

அந்த படத்தை தயாரித்து நடிக்கவும் செய்தார்.படம் வித்தியாசமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இந்திய அளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே..

சிறப்பாக நடித்ததால் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை மட்டும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இது இப்படி இருக்க விக்ரம் மூன்றாவது பாகத்தில் யார் யார் நடிப்பார் என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது அந்த வகையில் விக்ரம் 3 யில் விஜய் நடித்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கேட்டுக் கொண்டு தான் வருகின்றனர்.

ஆனால் அது நடக்குமா நடக்காதா என்பது இயக்குனர் கையில் தான் இருக்கிறது. சமீபத்தில் கூட எதிர்பாராதவிதமாக தளபதி ஐயா என விஜய் குறித்து கமல்ஹாசன் பேசியது மக்கள் மத்தியில் பரவியது அப்படி என்றால் விக்ரம் 3இல் விஜய் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா..

என்றும் ரசிகர்கள் கேட்டுக்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் பார்ட்டி ஒன்றில் கமலஹாசனும் தளபதி விஜய்யும் இணைந்து சகலகலா வல்லவன் என்ற பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய உள்ளனர். அந்த நடனம் ஆடி அசத்திய வீடியோவை நீங்களே பாருங்கள்.