தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா இவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கம் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்த சூர்யா அவர்கள் ஒரு சில பிரச்சனையின் காரணமாக அந்த படத்தை பாதையில் நிறுத்திவிட்டு தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தன்னுடைய 42வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனை அடுத்து இயக்குனர் வெற்றிமாரனுடன் கூட்டணியில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் சூர்யா. ஏற்கனவே வாடிவாசல் படத்திற்கான பயிற்சி முடிவடைந்த நிலையில் படபிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
வணங்கான் திரைப்படத்தை முடித்தவுடன் அடுத்ததாக வாடிவாசல் படத்தில் நடிப்பார் எதிர்பார்க்கப்பட்டிருந்த நேரத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் தன்னுடைய 42 வது படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் சூர்யா 42 வது திரைப்படம் ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகி வருகிறது.
இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அது மட்டுமல்லாமல் இந்த படத்திற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்க வைத்துள்ளது. இந்த நிலையில் சூர்யா 42 ஆவது படத்திற்கான ஒரு அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சூர்யாவின் 42வது திரைப்படம் 3d தொழில்நுட்பத்தில் உருவாகிறது மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உள்ளிட்டா ஐந்து மொழிகளிலும் உருவாகி வருகிறதாக கூறப்படுகிறது அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் 13 கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே நடிகர் சூர்யாவை போல நடிகர் கமல் அவர்கள் தசாவதாரம் திரைப்படத்தில் 10 வேடங்களில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான கோப்ரா திரைப்படத்தில் நடிகர் விக்ரம் அவர்கள் ஆறு கேட்டப்பில் நடித்துள்ளார். இந்த இரண்டு முன்னனி நட்சத்திரங்களை மிஞ்சக் கூடிய அளவிற்கு தற்போது சூரிய அவர்கள் தன்னுடைய 42வது திரைப்படத்தில் 13 கேட்டப்பில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் நடிகர் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.