பார்த்திபன் சொன்னதைக் கேட்டு கைதட்டி சிரித்த கமல்,ரஜினி.!

ponniyin selvan

மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ள நிலையில் முதலில் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த்,கமலஹாசன் மற்றும் இயக்குனர் மிஷ்கின், சங்கர் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு மூன்று வருட தன்னுடைய கடின உழைப்பினால் பொன்னியின் செல்வன் படத்தினை மணிரத்தினம் இயக்கியுள்ளார். அந்த வகையில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக இருப்பதாக பட குழுவினர்கள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

எனவே தற்பொழுது இந்த படத்தினை பிரம்மாண்டமாக புரொமோட் செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இசை வெளியீட்டு விழாவில் டிரைலரிலும் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆறு மணிக்கு டிரைலர் வெளியாகும் என பட குழுவினர்கள் அறிவித்து இருந்த நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வந்தார்கள். ஆனால் 9 மணி அளவில் தான் ரிலீஸ் செய்யப்பட்டது.

parthipan
parthipan

இருப்பினும் ட்ரெய்லர் வெளியாகாத காரணத்தினால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தினை தயாரித்த லைகா நிறுவனத்தை திட்டி தீர்த்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக், ஜெயம் ரவி, விக்ரம் மற்றும் பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் இவர்களை தொடர்ந்து ஏராளமான நட்சத்திர பட்டாள்கள் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ள நிலையில் மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் உருவாகியுள்ளது இப்படிப்பட்ட நிலையில் பார்த்திபன் நேற்று பொன்னியின் செல்வன் படத்தின் வெளியிட்டு விழாவில் பேசும்பொழுது இந்தி தெரியாது என இந்திலயே சொன்னது அனைவரையும் சிரிக்க வைத்தது மேலும் இதனை கைதட்டி கமல், ரஜினி ஆகியோர்கள் சிரித்துள்ளார்கள்.