பிரபல முன்னணி நடிகர் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள கமல் மற்றும் ஜீவா.!

kamal-hassan
kamal-hassan

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபல நடிகரின் திரைப்படத்தில் கமலஹாசன் மற்றும் ஜீவா இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கமலஹாசன் அவர்கள் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவு பெற்றது இதனை அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி வருகிறார்.

மேலும் இவருடைய நடிப்பில் கடைசியாக விக்ரம் திரைப்படம் வெளிவந்த நிலையில் இதனை அடுத்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது பிரபல முன்னணி நடிகர் திரைப்படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

அதாவது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் ஜல்லிக்கட்டு இயக்குனர் இயக்கத்தில் தற்பொழுது ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் ராஜஸ்தான் பகுதியில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

mohanlal 1
mohanlal 1

இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தில் தான் கமலஹாசன் மற்றும் ஜிவா ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் இவர்கள் நடிக்க இருக்கும் அந்த காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தகவல் தற்போது வெளியாக இருக்கும் நிலையில் விரைவில் பட குழுவினர்கள் சார்பில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு ஏற்கனவே மோகன்லால் அவர்களுடன் இணைந்து கமலஹாசன் அவர்கள் உன்னை போல் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மோகன்லால் விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அதே படத்தில் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.