கமல் முன்னாடி தலைகுனிந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – படப்பிடிப்பு தளத்தில் நடந்த தரமான சம்பவம்..

vikram-movie-
vikram-movie-

இளம் இயக்குனர்கள் அண்மை காலமாக தமிழ் சினிமாவை கட்டி ஆளுகின்றனர் என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் இளம் இயக்குனர்கள் தான் டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கி அசத்துகின்றனர் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அதைத் தொடர்ந்து மற்றொரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க..

தனது ஆசை நாயகன் கமலுடன் இணைந்து விக்ரம் எனும் திரைப்படத்தை உருவாக்கி உள்ளார் படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் ரிலீசாக உள்ளது. விக்ரம் படத்தில் கமலுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

அதற்கு முன்பாக ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுக்க படக்குழு தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிடுகிறது மேலும் விக்ரம் படம் குறித்தும் கமல் குறித்தும் தொடர்ந்து செய்திகள் வெளிவருகின்றன. இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழக பேட்டி ஒன்றில் விக்ரம் படப்பிடிப்பில் நடந்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

விக்ரம் படத்திற்கான முதல் காட்சியை உலகநாயகன் கமலஹாசன் அலுவலகத்தில் எடுத்திருந்தார்.  அப்பொழுது கமலின் கண்கள் மட்டுமே குளோசப் ஷாட்களை வைத்து அந்த காட்சிகள் எடுக்கப்பட்டதாம் சிறுவயதிலிருந்தே கமலஹாசனை பார்த்து வளர்ந்து சினிமாவில் நுழைய ஆசைப்பட்ட லோகேஷ் கனகராஜ்.

முதல்முதலாக நேருக்கு நேர் உலகநாயகன் கமலஹாசனின் நடிப்பை பார்த்து மெய்சிலிர்த்து பூரிப்பு அடைந்தாராம். ஷாட் முடிந்ததும் கட் சொல்வதற்கு பதிலாக கெட்ட வார்த்தையில் சொல்லிவிட்டாராம் விக்ரம் படப்பிடிப்பு தளமே சற்று அதிர்ச்சியாகி உள்ளது அப்போது எனக்கு ஒரு மாதிரியாக இருந்ததாக பேட்டியில் தெரிவித்தார்.