ஒரே படத்தில் ஹீரோ, வில்லனாக நடித்த கமல்.! கொடூர வில்லனாக மிரட்டிய ரஜினி.! எந்த படம் தெரியுமா.?

Rajini

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இப்பொழுதும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து தனது மார்க்கெட்டை தூக்கி வைத்து ஓடிக் கொண்டிருக்கின்றனர். ரஜினி நடிக்க வரும் போது தென்னிந்திய  உலகில் ஓரளவு நல்ல பெயரை வைத்து ஓடிக் கொண்டிருந்தார் கமல்.

இவர் தமிழையும் தாண்டி மலையாளம் போன்ற பிறமொழி பக்கங்களிலும் நடித்து வெற்றிகளை அல்லினார் அப்படித்தான் மலையாளத்தில் வின்சென்ட் ரோஜா மணி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க கமல் வில்லனாக நடித்து வெளியான திரைப்படம் மற்றொரு சீதா.

இந்தப் படத்தில் கமல் ஒரு கொடூர வில்லனாக மிரட்டி இருப்பார் இது ஒரு தெலுங்கு ரீமேக் படம் தான் படத்தின் கதை என்னவென்றால் ஹீரோயின் வேறு ஒருவரை காதலித்துக் கொண்டிருக்க அவள் மீது கமலுக்கு ஆசை வந்து விடுகிறது. இதனால் ஹீரோயின் காதலிக்கும் ஹீரோவை தீர்த்து கட்டுகிறார்.

கமலுக்கு தக்க படம் புகட்ட ஹீரோயின்  கமலுடைய அப்பாவை திருமணம் செய்து கொள்கிறார் இதனால்தான் செய்த முட்டாள்தனத்தை எண்ணி கமல் வருத்தப்படுகிறார் இந்த படத்தை பிரபல இயக்குனர் பாலச்சந்தர் தமிழில் மூன்று முடிச்சு என்னும் தலைப்பில் படத்தை எடுத்தார்.

Rajini and kamal
Rajini and kamal

படத்தில் கமல் ஹீரோவாக நடிக்க ஸ்ரீதேவி ஹீரோயின்னாக நடிக்க ரஜினி கொடூர வில்லனாக இந்த படத்தில் நடித்தார்.மூன்று முடிச்சு படம் வெளிவந்து அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தமிழில் மட்டும் அல்ல தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.