அச்சு அசல் கமல் போலவே நடனமாடும் நடிகர்.! பார்ப்பவர்களை மிரளவைக்கும் வீடியோ

1989 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் அபூர்வ சகோதரர்கள், இந்த திரைப்படத்தில் கமல் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், இந்த படம் அந்த காலகட்டத்தில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தில் கமல் புலிவேஷம் போட்டபடி நடனமாடும் அண்ணாத்த ஆடுறார் பாடல் இடம் பெற்றிருக்கும்.

அந்த காலத்தில் இந்த பாடல் மிகவும் பிரபலம், இப்பொழுதும் இந்த பாடலை கேட்டால் பல ரசிகர்கள் துள்ளல் ஆட்டம் போடுவார்கள், இந்த நிலையில் இந்த பாடலுக்கு உடற்பயிற்சி செய்யும் டிரெட்மில்லில் ஏறி நடனமாடி அதை சமூகவலைதளத்தில் பதிவேற்றிய உள்ளார் நடிகர் அஸ்வின்.

வீடியோவை பார்த்த பலரும் கமல்தான் நடனம் ஆடுவது போன்று இருப்பதாக கூறினார்கள் அதேபோல் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிக வேகமாக வைரலானது, அப்படியே இந்த வீடியோ கமலஹாசன் கண்ணில் பட இதைப்பார்த்த கமலஹாசன் நடிகர் அஸ்வின் குமாருக்கு பாராட்டு தெரிவித்தார்.

அதில் அவர் கூறியதாவது “நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!” என்று அஸ்வினை பாராட்டியுள்ளார்.