கமல் 8 அடின்னா ரஜினி 16 அடி…! ஆண்டவருக்கு போட்டியாக சம்பளத்தை ஏற்றிய சூப்பர் ஸ்டார்.! அதுக்குன்னு இத்தனை கோடி வாய் பிளக்கும் கோலிவுட்

kamal-rajini
kamal-rajini

பொதுவாக ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் நல்ல நண்பர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால் தற்போது உலக நாயகனுக்கு போட்டியாக இருக்கக்கூடியவரும் நடிகர் ரஜினி என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் நடிகர் கமலை விட ரஜினி அதிகமாக சம்பளம் கேட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது இந்த தகவல் தான் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்கள் நடிகர் ரஜினி மற்றும் கமல் இவர்கள் இருவரும் சினிமாவில் 80 மற்றும் 90களில் இருந்தே போட்டி போட்டு கொண்டு வருகிறார்கள் அப்படி நடிகர் கமல் அவர்கள் விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்தி நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் நடிகர் ரஜினி காந்த்தும் தான் நடிக்கும் அடுத்த படத்திற்கு 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்க உள்ளதாக தற்பொழுது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார் இந்த படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் அவர்கள் இயக்கி வருகிறார்.

அதனை தொடர்ந்து நடிகர் ரஜினி அவர்கள் தற்போது ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் முடிந்தவுடன் அடுத்த இரண்டு படங்களில் நடிக்க உள்ள நிலையில் அந்த இரண்டு படங்களையும் சேர்த்து 250 கோடி சம்பளமாக உள்ளதாக கூறப்படுகிறது ஜி எஸ் டி சேர்த்து இரண்டு படுத்திருக்கும் 300 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தான் தற்போது சினிமா வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறிவிட்டது.