தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இவர் வேறு யாரும் கிடையாது இந்திய திரைப்பட தயாரிப்பாளரான பிரியதர்ஷன் மற்றும் மலையாள நடிகை லிசிக்கும் மகளாக பிறந்தவர். இவர் சினிமா உலகில் முதன்முதலாக தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
அதன் பிறகு தமிழில் முதன்முதலாக கலை இயக்குனராக விக்ரம் நடிப்பில் வெளியாகிய இருமுகன் என்ற திரைப்படத்தில் பணிபுரிந்தார் அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமா உலகில் வெளியாகிய ஹலோ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் இந்த திரைப்படம் இவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
எப்படியாவது தமிழ் மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என தமிழ் சினிமா பக்கம் தனது பார்வையை வீசினார் இந்தநிலையில் கல்யாணி பிரியதர்ஷன் அவர்களின் நடிப்பை பார்த்து வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகிய மாநாடு திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.
கல்யாணி பிரியதர்ஷன் அவர்கள் ஒரு காலகட்டத்தில் பேட்டி ஒன்றை கொடுத்தார் அந்த பேட்டியில் தாம் ஒரு மாடலாக மிகவும் கஷ்டப் பட்டதாக கூறியுள்ளார் அப்போதெல்லாம் என்னுடைய பிரண்ட்ஸ் நீ என்ன மாடலாக போறியா நீயே ஒரு குண்டு நீ எல்லாம் எப்படி மாடலாக போவாய் என மிகவும் மட்டம் தட்டி பேசினார்கள்.
அதற்கு கல்யாணி பிரியதர்ஷன் நான் கொஞ்சம் குண்டு தான் ஆனால் என்னுடைய கை ரொம்ப சின்னதாக இருக்கும் என்னதான் நான் குண்டாக இருந்தாலும் என் கையை மட்டும் பார்த்தால் சின்ன பொண்ணு போல் இருக்கும் சின்ன பொண்ணுங்க அணியும் வளையலை தான் நானும் போடுவேன் என வருத்தத்துடன் பேசியுள்ளார்.