பல நடிகைகள் சினிமாவில் ஒரு சில சீரியல்கள் அல்லது சில படங்களில் மட்டும் நடித்து பிரபலம் அடைந்து விட்டு திடீரென்று காணாமல் போன நடிகைகள் பலர் உள்ளார்கள்.
அந்த வகையில் சரவணன் மீனாட்சி தொடரில் முதலில் நடித்த நடிகர் செந்தில் மற்றும் நடிகை ஸ்ரீஜா இவர்களுக்கு தான் பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடித்தது இவர்களுக்கு இன்று வரையிலும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டர்கள் அதேபோல் திருமணம் செய்துகொண்டார்கள்.
இவர்கள் இடையில் இருவரும் இணைந்து சீரியல்களில் நடித்து வந்தார்கள். பிறகு செந்தில் மட்டும் நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சில சீரியல்களில் நடித்து வந்தார்.
இவர்கள் இதற்கு முன்பு கல்யாணம் கண்டிஷன் அப்ளை என்ற சீரியலில் இருவரும் இணைந்து நடித்து வந்தார்கள். தற்போது அந்த சீரியலின் இரண்டாம் பாகம் தயாரித்து வருகிறார்கள். ஷூட்டிங்கின் போது எடுத்த வீடியோவை செந்தில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த செந்தில் மற்றும் ஸ்ரீஜாவின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்.