600 கோடி பட்ஜெட்டில் உருவான பிரபாஸின் கல்கி 2898ஏடி இதுவரை செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..?

பொதுவாக பான் இந்திய திரைப்படமாக பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் பிரபாஸ் பாண் இந்தியா திரைப்படமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக உருமாறி உள்ளது.

இந்த நிலையில் பான் இந்தியா திரைப்படமாக ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் கல்கி 2898AD இந்த திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகிய நடிகையர் திலகம் திரைப்படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தான் இயக்கியுள்ளார்.

பிரம்மாண்ட தயாரிப்பில் வெளியாகியுள்ள கல்கி 2898ஏடி திரைப்படம் பல மொழிகளில் உருவாகியுள்ளது அதேபோல் திரையரங்கில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது அறிவியல் பூரணக் கதையை கலந்து திரைக்கதையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியாகியது.

படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் வெளியானது இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது ஆனால் ஒரு தரப்பு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பிரம்மாண்டமேக்கிங் காரணமாக திரையரங்கிற்கு சென்று தான் படத்தை கண்டு வருகிறார்கள் அந்த வகையில் 600 கோடி பட்ஜெட் உருவான இந்த திரைப்படம் ஐந்து நாள் முடிவில் 575 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.