தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய் இவர் சமீபத்தில் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் விஜயை இயக்குவதற்கு பல இயக்குனர்கள் போட்டி போடுவார்கள் அதுமட்டுமில்லாமல் விஜய்யுடன் எப்படியாவது ஒரு திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் ஆசைப்படுவது உண்டு.
ஆனால் தற்பொழுது வரும் இளம் நடிகைகளும் விஜய் உடன் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் இருந்தாலும் ஒரு சில இயக்குனர்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் அந்த வகையில் இயக்குனர் சற்குணம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் இவர் 2010 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியாகிய களவாணி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார் அதேபோல் விமலுக்கு தங்கையாக நடித்தவர் தான் மனிஷா பிரியதர்ஷினி. இவர் களவாணி திரைப்படத்தை தொடர்ந்து நாணயம், சவாலே சமாளி, நிம்மதி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.
அதேபோல் வெள்ளித்திரையில் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்கும் இவர் படப்பிடிப்பிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார் இவர் கூறியதாவது நான்காம் வகுப்பு படிக்கும் பொழுதே தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்ததால் தேசியளவில் எனக்கு கோல்டு மெடல் கிடைத்தது எனவும் கல்லூரியில் எனக்கு தொண்ணூற்று 5% மதிப்பெண் பெற்று மீண்டும் கோல்ட் மெடல் கிடைத்தது எனவும் கூறியுள்ளார்.
படிப்பில் சாதித்த இவர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று பல கனவுகளுடன் போராடி வருகிறார் இந்த நிலையில் இவர் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது பாலுமகேந்திரா திரைப்படத்தில் தான் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது ஆனால் பாலுமகேந்திரா இறந்துவிட்டதால் இவரின் ஆசை நிராசையாக போனது இந்த நிலையில் சற்குணத்தின் உதவியால் பிரபல இயக்குனர் ஒருவர் இயக்கும் கபே என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார்.
அந்த திரைப்படத்தில் ஆறு வருடங்களாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்தது ஆனால் தற்போது இவர் என்ன செய்கிறார் எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது ஆறு வருடங்களாக எந்த ஒரு தகவலும் சமூகவலைதளத்தில் வெளியாகவில்லை. மேலும் அந்த பேட்டியில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை எனவும் ஆனால் அவரது தங்கையாக நடிப்பதற்கு மட்டும்தான் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் எனக்கு தங்கையாக விஜயுடன் நடிப்பதற்கு சம்பந்தமில்லை ஏனென்றால் தங்கையாக நடித்தால் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க முடியாது என கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் விஜய்யை நான் மாமா மாமா என்று கூப்பிட்டு பழகி விட்டேன் அதனால் அவருக்கு தங்கையாக நடித்து விட்டால் ஜோடியாக நடிக்க முடியாது என்பதற்காக கிடைத்த வாய்ப்பையும் வேண்டாம் என நிராகரித்துள்ளார்.
இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.