சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுபவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த கலாநிதி மாறன்.! 70 வயதில் உங்களால் இதை செய்ய முடியுமா?

JAILER RAJINI
JAILER RAJINI

Jailer audio launch: நேற்று ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட சன் பிரக்சஸ் கலாநிதி மாறன் ஏராளமான தகவல்களை பகிர்ந்துள்ளார் அது குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் சூப்பர் ஸ்டார் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார்.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கடைசியாக இவருடைய நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி படும் தோல்வியினை பெற்ற நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் வெற்றியினை தந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறார்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ஜெயிலர் படம் விரைவில் ரிலீஸ்சாக இருக்கிறது. எனவே அதற்கான பிரமோஷன் பணிகளில் பட குழுவினர்கள் ஈடுபட இருக்கிறார்கள். அதற்கு முதல் கட்டமாக இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் ஏராளமானவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

அப்படி கலாநிதி மாறன் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற  நிலையில் அதில் ரஜினிகாந்த்க்கு போட்டியே இல்லையா? என்று கூறி தளபதியின் பெயரை சொல்லி கேப்விட அரங்கமே அதிர்ந்தது. உடனே விஜய் சொன்னது போல ரஜினிகாந்துக்கு சிவாஜி ராவ் தான் போட்டியே வேற யாருமே கிடையாது என கூறினார். மேலும் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு சிலர் ஆசைப்படலாம் அதில் தப்பே இல்லை.

ஆனால் அவர்களுக்கு நான் ஒன்னு சொல்லிக்கிறேன் 70  வயதிலும் பெரிய தயாரிப்பாளர் உங்களை நம்பி வந்த படம் பண்ணனும் அந்த வயதிலும் ரஜினியை போல ஸ்பீடா நடக்கணும், நடிக்கணும்.. உங்க படத்தை பார்க்க அப்பவும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமா இப்படி காத்து கிடக்கணும், அப்போ நீங்க ஆசைப்படலாம் என்று கலாநிதி மாறன் கூறியிருக்கிறார். இதனை அடுத்து தமிழ்நாட்டில் மட்டும் இல்லை இந்தியாவிலேயே ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான் என அவருடைய மாஸான பேச்சு பலரையும் கவர்ந்தது.