Nelson Dilipkumar : இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் வெற்றியால் தற்பொழுது மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளார் இவர் இதற்கு முன்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கி உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி உடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தை எடுத்தார்.
படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படத்தில் ரஜினியின் மாறுபட்ட நடிப்பு பலரையும் கவர்ந்து இழுத்தது மேலும் அவருடைய காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தும் பிரமாதமாக இருந்தது மற்றவர்களும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்ததால் ஆரம்பத்திலேயே பாசிட்டிவான விமர்சனங்களை அள்ளி பட்டி தொட்டி எங்கும் படம் நன்றாக ஓடியது.
அதன் காரணமாக ஜெயிலர் படத்தின் வசூலும் அதிகரித்தது படம் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்த நிலையில் இதுவரை 550 கோடிக்கு மேல் வசூல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சந்தோஷமடைந்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நெல்சனுக்கு பரிசு ஒன்றை கொடுக்க திட்டமிட்டார் அதன்படி 8 சொகுசு கார்களை காட்டி இதில் எது வேண்டும் என கேட்டு உள்ளாராம்..
8 சொகுசு கார்களை பார்த்த நெல்சன் ஒவ்வொன்றாக ஓட்டி பார்த்துட்டு சொல்றேன் என சொல்லி உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் நெல்சனுக்கு கார் மட்டும் கொடுத்தால் போதாது.. அவரது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பரிசை கொடுக்க வேண்டும் என எண்ணிய சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்..
உங்களுடைய அடுத்த படத்தையும் நாங்கள் தான் தயாரிக்க இருக்கிறோம். ஜெயிலர் படத்தில் வாங்கிய சம்பளத்தை விட டபுள் மடங்கு அதிகமாக கொடுக்க இருக்கிறோம் என உறுதியாக கூறியுள்ளார்களாம் இந்த தகவல் நெல்சன் நெருக்கமானவர்கள் சமூக வலைதள பக்கத்தில் பரப்பி வருகின்றனர்.