kalaignar 100: சென்னையில் நடைபெற்று வரும் கலைஞர் 100 விழாவில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்று வரும் நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவரான கலைஞருக்கு நூற்றாண்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
அப்படி இந்த விழாவில் ரஜினிகாந்த், நயன்தாரா, தமிழ்நாடு அமைச்ச உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். மேலும் முன்னணி நடிகர்களான சூர்யா, கமல்ஹாசன், தனுஷ், ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் கலைஞர் 100 விழாவில் பங்கு பெற்றார்கள்.
இதனை அடுத்து யாரெல்லாம் கலைஞர் 100 விழாவுக்கு வரவில்லை என்பது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதில் முக்கியமாக நடிகர் அஜித், விஜய் இருவரும் சென்னையில்தான் இருப்பதாகவும் ஆனால் இவர்கள் கலைஞர் 100 விழாவில் பங்கு ஏற்கவில்லை எனவும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மறுபுறம் விடாமுயற்சி படத்திற்காக அஜர்பைஜான் நாட்டில் அஜித் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு முறை கலைஞர் நடத்திய விழாவில் அஜித்தை விடாப்பிடியாக கலந்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இதன் காரணமாக மேடையில் பேசிய அஜித் விழாவுக்கு வரவில்லை என்றாலும் வற்புறுத்தி அழைத்தார்கள் என உண்மை சம்பவத்தை கூற அனைவரும் அதிர்ச்சியானார்கள் இதற்கு ரஜினிகாந்த் கைதட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் படத்தை முதல் நாள் முதல் ஷோ விசில் அடிச்சு பார்ப்பேன் – சூப்பர் ஸ்டார் பகிர்ந்த தகவல்
இவரைத் தொடர்ந்து விஜய், விஷால், சிம்பு, விக்ரம் உள்ளிட்ட முன்னணி திரைப்படங்களும் கலைஞர் 100 விழாவில் பங்கேற்கவில்லை. விஷால் வெளிநாட்டில் சுற்றித் திரியும் வீடியோ வெளியானது கேப்டன் மறைவிற்க்கு கூட வீடியோ மூலம் தனது இரங்கலை தெரிவித்தார் அதேபோல் சிம்புவும் வெளிநாட்டில் படப்பிடிப்பில் உள்ளார்.