kalabhavan mani death reason : பிரபல மலையாள நடிகராக வலம் வந்தவர் நடிகர் கலாபவன் மணி தமிழில் தமிழ் சினிமாவில் ஜெமினி புதிய கீதை, எந்திரன், பாபநாசம், என பல திரைப்படங்களில் நடித்தார் மேலும் இவர் 2016 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் திருச்சூர் சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்து சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த நிலையில் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அப்பொழுது இவரது மரணம் குறித்து பல சந்தேகங்கள் எழுந்தது அதாவது மதுவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் மிகப்பெரிய சந்தேகத்தை முன் வைத்தார்கள்.
அதனால் கலாபவன் மணியின் குடும்பத்தினர் தொடர்ந்து வழக்கில் மரணம் குறித்து விசாரிக்க சிபிஐக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டது அதனால் இரண்டு ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு கலாபவன் மணியின் மரணம் கொலை அல்ல அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தியது காரணம் என கண்டுபிடித்தார்கள்.
இந்த நிலையில் பகீர் தகவலை வெளியிட்டுள்ள கேரளா ஐபிஎஸ் அதிகாரி உன்னி ராஜன் அவர் தினசரி 12 முதல் 13 பாட்டில் பீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் அதனால் கல்லீரல் செயலிழந்த நிலையில் அவர் அளவுக்கு அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்தை விடவில்லை.
ரம்பா என்னையா ரம்பா.. இத பாருங்க தெம்பா.. இணையதளத்தை அலறவிடும் விஜே அஞ்சனா..
கல்லீரல் செயலிழந்து இரத்த வாந்தி எடுத்த பொழுதும் அவர்பீர் குடிப்பதை கைவிடவில்லை அதனால் தான் அவரின் மரணம் நிகழ்ந்தது போல் கூறியுள்ளார்கள் அவர் 2016 ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி கலாபவன் மணி 12 பாட்டில் பீர் குடித்துள்ளார் என்றும் அதில் மெத்தில் ஆல்கஹால் இருந்ததும் பிரத பரிசோதனை கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.