நடிகர் தனுஷ் நடிப்பை தாண்டி தயாரிப்பதிலும் இறங்கி விட்டார் இவர் தயாரிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி தான் அந்த வகையில் 2014-ம் ஆண்டு தனுஷ் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் காக்கா முட்டை இந்த திரைப்படம் மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.
குறைந்த பட்ஜெட்டில் எடுத்தாலும் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டியது பீட்சா சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் சேரி சிறுவர்களின் கதை தான் இது. இந்த படத்தில் நடித்த சிறுவர்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒரு கலக்கு கலக்கினார்கள். இவர்கள் இருவருமே சென்னையை சேர்ந்த காசிமேடு பகுதியை சேர்ந்தவர்கள்.
இவர்கள் இருவரும் இங்கு விளையாடிக்கொண்டிருந்தார்கள் அப்பொழுது இயக்குனர் மணிகண்டன் இவர்களை படத்தில் நடிக்க வைத்தார் இந்த படத்தில் நடித்ததன் மூலம் ஒரே நாளில் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார்கள், இவர்கள் 2015 ஆம் ஆண்டு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை ஜனாதிபதி கையால் வாங்கினார்.
அதுமட்டுமில்லாமல் தோனியை சந்தித்து தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டனர் இந்த திரைப்படத்தில் நடித்த விக்னேஷ் சமுத்திரகனியின் அப்பா திரைப்படத்திலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார், இந்நிலையில் விக்னேஷ் எண்ணூரில் உள்ள கார்ப்ரேஷன் பள்ளியிலும ரமேஷ் காசிமேட்டில் படித்து வருகிறார்.
தற்போது இருவரும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள் இந்த நிலையில் இவர்கள் இருவரும் எங்களுக்கு படிப்பு மட்டும் தான் கை கொடுக்கும் என்று நினைக்கிறோம் ஒருவேளை படிப்பு கைவிட்டால் சினிமாவுக்கு வருவோம் என கூறினார்கள் தற்போது இவர்கள் மீசையுடன் தாடியுடனும் இருக்கும் புகைப்படத்தை வெளியுட்டுள்ளர்கள் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போகிறார்கள்.