தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால் இவ்வாறு பிரபலமான நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் தனுஷ் என பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் நமது நடிகை கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் கௌதம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்தவகையில் என்னதான் திருமணம் நடந்தாலும் திருமணத்திற்கு பின்பும் நான் நடிப்பேன் என காஜல் ரசிகர்களுக்கு உறுதியளித்திருந்தார்.
ஆனால் நடிகை காஜல் அகர்வால் நாளடைவில் தான் நடித்துக் கொண்டிருந்த பல்வேறு திரைப்படங்களில் இருந்து விலகியது மட்டுமில்லாமல் ஒப்பந்தமான பல திரைப்படங்களில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு தொடர் சந்தேகத்தின் அடிப்படையில் காஜல் கர்ப்பமாக இருக்கிறார் என ரசிகர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் உறுதியாக நம்ப ஆரம்பித்தார்கள் அந்த வகையில் சமீபத்தில் இது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையில் அவை மறுக்கப்பட்டது.
ஆனால் சமீபத்தில் காஜல் அகர்வாலின் கணவர் கௌதம் புது வருடத்தை கொண்டாடும் வகையில் காஜல் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். இவ்வாறு வெளிவந்த தகவலின்படி நடிகை காஜல் அகர்வாலுக்கு பல்வேறு தரப்பு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.