உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் உருவான திரைப்படம் தான் விக்ரம் இந்த திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் ஏற்கனவே தமிழில் மூன்று திரைப்படங்களை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் தமது இயக்குனருக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் உலகநாயகன் கமலஹாசன் தான் இவர் உலகநாயகனின் தீவிர ரசிகர் என்றே சொல்லலாம் அந்த வகையில் தன்னுடைய தலைவருக்குக் ஏற்றார்போல் சிறந்த கதையை செதுக்கியது மட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தை மாபெரும் வெற்றிபெற வைத்துள்ளார்.
மேலும் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் பற்றிய பல்வேறு பிரபலங்களும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள் அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை பெருமளவு கவர்ந்த நடிகை காஜல் பசுபதி சில கேள்விகளை கேட்டுள்ளார்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு 3 சீரியல் நடிகைகள் மனைவியாக நடித்து இருப்பார்கள் அதில் ஷிவானி நாராயணன் மைனா நந்தினி மற்றும் மகேஸ்வரி ஆகியவர்கள் ஆவார்கள். ஆனால் இந்த மூவருக்கும் இந்த திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரம் கொடுத்திருந்தாலும் அவை பெரிய அளவில் வெற்றியைக் கொடுத்துள்ளது.
அந்த வகையில் இந்த வெற்றியைப் பார்த்த காஜல் பசுபதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கேள்வி எழுப்பும் வகையில் நாங்கள் எல்லாம் எதற்கு இருக்கிறோம் நாங்களும் விஜய்டிவிசீரியல் நடிகைதான் எங்களையும் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய நடிப்புக்கு சூப்பர் ஜி சூப்பர் என பதில் கூறியுள்ளார்.