மகாலட்சுமிக்கு ஆதரவாக பேசிய காஜல் பசுபுலேட்டி.! பாராட்டும் ரசிகர்கள்..

kajal-basupathy
kajal-basupathy

சினிமாவை பொருத்தவரை திருமணம் என்பது அவரவர்களின் விருப்பம் ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அவருடன் தான் வாழ வேண்டும் என்று அவசியம் இல்லை பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து பெற்றுக்கொண்டு தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை தான் மகாலட்சுமி.

இவர் நீண்ட நாள் காதலித்து தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் சில வருடங்கள் கழித்து இவர்களுக்கு குழந்தையும் பிறந்தது. இப்படிப்பட்ட நிலையில் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள் விவாகரத்திற்கு பிறகும் மகாலட்சுமி தொடர்ந்து சீரியல்களில் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

மேலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சமீபத்தில் இவர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை திருமணம் செய்து கொண்டார். கோலாகலமாக நடந்த இவர்களுடைய திருமண புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலானது. இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு சீரியல் நடிகர் ஈஸ்வரன் தொடர்பில் இருப்பதாக சர்ச்சை எழும்பியது அந்த வகையில் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ தொடர்ந்து மகாலட்சுமியை குற்றம் சாட்டி வந்தார்.

ஆனால் மகாலட்சுமி அப்படியெல்லாம் கிடையாது என இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மகாலட்சுமி தற்பொழுது ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதால் பலரும் பணம் தான் அதற்கு காரணம் என கூறி வருகிறார்கள். மேலும் இவர்களை கலாய்ப்பது போல் பல மீம்ஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் பதிலடி கொடுக்கும் வகையில் காஜல் பசுபதி மகாலட்சுமிக்கு ஆதரவாக பேசியுள்ளார் .

அவர் கூறியதாவது,’எப்படிங்க நயன்தாரா விக்னேஷ் சிவனை கட்டிக்கிட்டாலும் நயன்தாரா மேல தான் தப்பு என சொல்றீங்க,மகாலட்சுமி ரவீந்தரை கட்டிக்கிட்டாலும் மகாலட்சுமி தான் தப்பு என்ன ஒரு ஆம்பள புத்தி’ என கூறியுள்ளார்.மேலும் இதனை பார்த்த பலரும் ஒருவரை திருமணம் செய்து கொள்வது அவரவர்களுடைய விருப்பம் என மகாலட்சுமிக்கு ஆதரவளித்து வருகிறார்கள்.