பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாக்கி வெளிவந்த இந்தியன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகியது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் சில காரணங்களால் பட பிடிப்பு பாதையிலே டிராப்பானது. தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவங்க உள்ளதாக கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் 24ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளதாம் மேலும் இதே நேரத்தில் இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ஒரு படம் இயக்கி வருகிறதால் அவரால்..
தொடர்ந்து இந்த படப்பிடிப்பை நடத்த முடியாத காரணத்தினால் நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக இந்தியன் 2 படத்தை எடுக்க உள்ளார். கமலும் தற்போது சில படங்களில் கமிட் ஆகி பிஸியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் இந்தியன் 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் ஹீரோயின்னாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார்.
அதன் பின் சில பிரச்சனைகளால் ஷூட்டிங் துவங்கவில்லை. நடிகை காஜல் அகர்வாலும் கர்ப்பமாக இருந்ததால் இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது எனக் கூறியுள்ளார். தற்போது காஜல் அகர்வால் குழந்தை பெற்று சில மாதங்கள் கடந்து தனது உடம்பை பிட்டாக வைத்து வருகிறார். இந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் நான் மீண்டும் இணைகிறேன் என கூறியுள்ளார்.
ஆனால் படக்குழு இவரை வைத்து எடுக்கலாமா இல்ல வேற ஹீரோயினை மாற்றலாமா என யோசித்து வருகிறதாம். இருந்தாலும் இந்தியன் 2 படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பில் காஜல் நடித்த காட்சிகள் இருப்பதால் அவரயே தொடர்ந்து நடிக்க வைக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகின்றன.