கட்டப்பாவாக மாறிய காஜல் அகர்வால் – புகைப்படத்தை பார்த்து உற்சாகமடையும் ரசிகர்கள்.!

kajal

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். ஆள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் தனது திறமையை சூப்பராக காட்டி அசதினார். அதிலும் குறிப்பாக தமிழில் தனக்கென ஒரு இடத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் தமிழ் சினிமா உச்ச நட்சத்திர நடிகர்களுடன் நடித்துள்ளார்.

அந்த வகையில் அஜீத், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை நிரந்தரமாக தக்க வைத்துக் கொண்டார். தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த காஜல் அகர்வால் தனது நண்பரும் தொழிலதிபருமான கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு சினிமா பக்கம் தென்படாமல் இருந்த இவர் கொஞ்ச நாட்கள் கழித்து தான் எட்டிப் பார்த்தார். ஆனால் திடீரென அவர் கர்ப்பமானதால் கமிட்டான படங்களில் இருந்து மீண்டும் விலக ஆரம்பித்தார். நடிகை காஜல் அகர்வாலுக்கு தற்பொழுது ஒரு மகன் பிறந்திருக்கிறார்.

அவரை பார்த்துக் கொள்வதற்கு முழு நேரமும் சரியாக போய்விடுவதால் சினிமாவில் நடிக்காமல் இருந்து வருகிறார். இருப்பினும் தான் நடிக்க வருகிறேன் என சொல்லி வருகிறார். ஆனால் வாய்ப்புகள் பெரிதளவு கிடைத்த மாதிரி தெரியவில்லை. இப்படி இருக்கின்ற நிலையில் தனது மகன் மற்றும் கணவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

அதுபோல தற்போது கூட நடிகை காஜல் அகர்வால் பாகுபலி கட்டப்பா போல போஸ் கொடுத்து அசத்தி உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் புதிய கட்டப்பா நீங்கள்தான் எனக் கூறி லைக்குகளையும்  கமெண்ட்களையும் அள்ளி வீசி அசத்தி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் நடிகை காஜல் அகர்வால் அழகில் ஜொலிக்கும் அந்த புகைப்படத்தை..

kajal
kajal