தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்பொழுது இவருக்கு ஒரு மகனும் இருக்கும் நிலையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் காஜல் அகர்வால் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கோஸ்டி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கும் நிலையில் வருகின்ற 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் சற்று முன்பு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் காஜல் அகர்வால் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில் குற்றவாளிக்கு பதிலாக வேறு ஒரு அப்பாவியை சுட்டு கொலை செய்து விட அந்த அப்பாவி பேயாக மாறி பழிவாங்கும் காமெடி கலாட்டா நிறைந்த படம் தான் கோஸ்டி.
காமெடி மற்றும் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஜல் அகர்வால் நடிப்பில் இந்த படம் உருவாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள். மேலும் பொதுவாக எந்த படம் என்றாலும் காமெடி என்றால் யோகி பாபு தான் இவருடைய காமெடிக்கு தான் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தினை குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இந்த படத்தினை இயக்கியுள்ளார். மேலும் காஜல் அகர்வால், கே.எஸ் ரவிக்குமார், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை உள்ளிட்ட ஏராளமான காமெடி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்க ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவில், விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் உருவாகி இருக்கிறது.