இந்தியன் 2 படத்திற்காக தடபுடலாக தயாராகும் காஜல் அகர்வால்..! விட்டா கமலுக்கே டப் கொடுப்பார் போல.. வைரல் வீடியோ.

kajal-agarwal
kajal-agarwal

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்களை இயக்கியுள்ளார். அந்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான் அந்த வரிசையில் தற்போது ஒரு படத்தை இயக்க முயற்சி செய்து வருகிறார். அந்தப் படம் வேறு எதுவும் அல்ல இந்தியன் 2 படம் தான்.

2019 ஆம் ஆண்டு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டிருந்தாலும் பிரச்சனை மேல் பிரச்சனையை சந்தித்ததால் அப்பொழுது நிறுத்தப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு லைகா நிறுவனம் மீண்டும் தலையிட்டு பிரச்சனையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் தற்போது மீண்டும் படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது.

உலக நாயகன் கமல் இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக கமல் 120 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்தில் பலர் நடிக்கின்றனர். அவர்களுக்கான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது இது இப்படி இருக்க இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் ஏற்கனவே சில காட்சிகள் நடித்திருந்தார்.

மீண்டும் அவரை நடிக்க வைக்க படக்குழு ஆசைப்படுகிறது ஆனால்  தற்போது அவர் குழந்தை பெற்று சற்று உடல் எடையை ஏற்றி உள்ளதால் அதிரடியாக உடல் எடையை குறைத்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை காஜல் அகர்வால் கத்தி பயிற்சி, யோகா, ஜிம் ஒர்க் அவுட் என தன்னால் என்ன எல்லாம் பண்ண முடியுமோ அதை எல்லாம் தீவிரமாக செய்து வருகிறார்.

இப்போது கூட நடிகை காஜல் அகர்வால் களரி பயிற்சிகளில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஒரு படத்திற்காக இப்படியெல்லாம் ரொம்ப மெனக்கெடுக்கிறீர்களே எனக் கூறி லைக்குகளையும், கமெண்ட்களையும் கொடுத்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த வீடியோவை..