நடிகை காஜல் அகர்வால் மகதீரா, நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் இவர் கோலிவுட் ,டோலிவுட் என அனைத்து சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழில் அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.
பின்பு 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பிரபல தொழிலதிபராக இருந்த கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு இவர் குழந்தைக்கு தாயானார் அந்த நிலையில் அப்பொழுது ஒரு போட்டோ சூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டார். காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.
ரசிகர்களும் நிகழ்ச்சியில் இருந்தார்கள் பின்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது இந்த நிலையில் காஜல் அகர்வால் மற்றும் கௌதம் கிச்சுலு இருவரும் இணைந்து நீல் என பெயர் சூட்டினார்கள் பின்பு தங்களுடைய குழந்தையின் புகைப்படங்களை முகம் தெரியாத அளவிற்கு இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார்கள்.
பின்பு சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் குழந்தையின் முகம் தெரியும் அளவிற்கு சில புகைப்படங்களை வெளியிட்டார்கள் இந்த நிலையில் காஜல் அகர்வாலின் குழந்தையின் பிறந்தநாள் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார் அதன் புகைப்படங்களை சமூக வலைதள பக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மஞ்சள் நிற உடையை அணிந்த காஜல் அகர்வாலின் குழந்தையின் சிரிப்பை பார்த்து பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள் அந்த வகையில் ராசி கண்ணா ரகுல் பிரீத் சிங், ஹன்சிகா, லட்சுமி மஞ்சு என பலரும் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்கள். தற்பொழுது காஜல் அகர்வால் தாயான பின்பும் இரண்டாவது ரவுண்டுக்கு தயாராகி வருகிறார் நடிகர் கமலஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்தியன் 2 திரைப்படத்தில் கமலஹாசன் அவர்களுக்கு மனைவியாக காஜல் அகர்வால் நடித்து வருவதால் அவருக்கு 3.30 மணி நேரம் மேக்கப் போட்டு வருவதாக பட குழு அறிவித்துள்ளது.