தெலுங்கு ,கன்னடம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சினிமா துறைக்கு வந்த பின் அவசரப்படாமல் கதைகளை பொறுமையாக தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் வெகு விரைவிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் காஜல் அகர்வால்.
தற்போது இவருக்கு என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை இருந்து வருகின்றன அதுமட்டுமில்லாமல் இவர் அனைத்து மொழி சினிமா உலகிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சிறப்பாக வலம் வருகிறார்.இவர் 2004 ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படமான ஹோ கயா நா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் நான்கு வருடங்கள் கழித்து 2008 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் தமிழில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அஜித் ,விஜய், சூர்யா, விஷால் போன்றவர்களுடன் இணைந்து நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் .
இப்படி சினிமா உலகில் மிக பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வால்.திடீரென திருமணம் செய்ய முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது தற்போது 35 வயதாகும் காஜல் அகர்வால். பிரபல தொழிலதிபரான கௌதம் என்பவரை நிச்சயம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாக மாப்பிள்ளை வீட்டாரிடம் சம்மதம் வாங்கி உள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இதைக்கேட்ட அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.