தென்னிந்திய சினிமா உலகில் பல்வேறு டாப் நடிகர்களுடன் நடித்து தனது திறமையையும், அழகையும் தூக்கி காட்டி தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து ஆட்சி செய்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தொடர்ந்து சினிமாவில் வெற்றியை ருசித்து வந்தாலும்..
ஒரு பக்கம் வயது அதிகமாகி கொண்டே போனதால் வேறு வழியின்றி திருமண விஷயத்தில் ஈடுபட தொடங்கினார் காஜல் அகர்வால். தனது நண்பரும் தொழிலதிபருமான கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சினிமாவுக்கு சிறு லீவு விட்டு மாலத்தீவு மற்றும் வெளிநாடுகளில் சுற்றி திருந்தார்.
காஜல் அகர்வால் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குவிய தொடங்கியது வேறு வழியின்றி வெப்சீரிஸ் மற்றும் சினிமா படங்களில் கமிட்டானார் ஆனால் திடீரென காஜல் அகர்வால் கர்ப்பமானதை அடுத்து அனைத்திலும் இருந்து வெளியேறினார். ஆனால் தெலுங்கு டாப் ஹீரோவான சிரஞ்சீவியுடன் கைகோர்த்து ஆச்சார்யா படத்தில் மட்டுமே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அந்தப் படத்தில் இவரது காட்சிகள் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன. தமிழில் இவர் இந்தியன் 2, ரவுடி பேபி ஆகிய படங்களில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. சில மாதங்கள் கழித்து குழந்தையைப் பெற்றெடுத்த நடிகை காஜல் அகர்வால். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அந்த குழந்தைக்கு “நீல்” என பெயர் வைத்துள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் காஜல் அகர்வால் தனது கணவர் மற்றும் மகன் இருவரையும் சேர்த்து வைத்து ஒரு புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..