தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தன்னை பிரபலப்படுத்தி கொண்டவர் நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் சென்டிமென்ட், ரொமான்டிக் சீன்களில் எப்படி நடித்து அசத்துகிறாரோ அதேபோல கிளாமர் காட்சிகளில் பின்னி பெடல் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்ததால் நடிகை காஜல் அகர்வாலின் சினிமா பயணம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் பல்வேறு புதிய படங்களிலும் கமிட்டாகினார். அந்த வகையில் இந்தியன் 2, ஆச்சாரியா பல்வேறு படங்களில் கமிட்டாகி ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட்டன.
பின் கொரோனா தாக்கம் காரணமாக படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வாலும் தனது நீண்டநாள் நண்பரும், தொழிலதிபருமான கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஹனிமூனுக்காக ஊர் சுற்றி வந்த இவர் திடீரென கர்ப்பமானர்.
இவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அவர் நடித்து வந்த படங்களில் இருந்து விலகி உள்ளார். ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவியுடன் ஓரிரு காட்சிகளில் நடித்திருந்தார் காஜல் அகர்வால் அந்த காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தன. அந்த காட்சிகளில் காஜல் அகர்வால் செம அழகாக துருதுருவென நடித்திருந்தார்.
ஆனால் படக்குழு அதைப் பார்த்துவிட்டு திருப்திகரமாக இல்லை என்ற காரணத்தினால் தற்பொழுது ஆச்சாரியா படத்திலிருந்து காஜல் அகர்வாலின் காட்சியை நீக்கிவிட்டு வேறு காட்சிகளை வைத்து படமாக எடுக்கப்பட்டு உள்ளது இதை அறிந்த ரசிகர்கள் நீக்கிய காட்சிகளை இணையதளத்தில் விடுங்கள் நாங்கள் பார்க்கிறோம் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.