தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். ஆனால் தற்பொழுது பெரிதாக பட வாய்ப்பு ஏதும் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு தனது திருமண வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
காஜல் அகர்வாலுக்கு தற்போது இந்தியன் 2 திரைப்படம் மட்டுமே தனது கையில் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் கமலஹாசன் அவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சமீபகாலமாக ரசிகர்கள் நடிகைகளிடம் ஆபாசமாக கேள்வி கேட்பதும் அத்துமீறி நடந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் நடிகைகளின் உறவினர்களைப் பற்றி ஏதாவது கேள்வி கேட்டு அவர்களை கஷ்டப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலிடம் ரசிகர் ஒருவர் காஜல் அகர்வாலின் கணவரை பற்றி கேள்வி கேட்டுள்ளார். அதாவது காஜல் அகர்வாலின் கணவர் பணக்காரரா அல்லது எப்படிப்பட்டவர் என கேள்வி கேட்டுள்ளார்.
அதனை நாசுக்காக புரிந்து கொண்ட நிஷா அகர்வால் அந்த ரசிகரின் கேள்விக்கு அதிரடியாக பதில் அளித்து உள்ளார். அதாவது காஜல் அகர்வாலின் கணவருக்கு குணத்தில் பணக்காரர் எனவும் நல்ல மனம் கொண்டவர் எனவும் அந்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த தகவலை காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர் கவுதம் அவர்களுக்கு சமூக வலைதள ட்ராக் செய்து இந்த பதிவை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த பல ரசிகர்கள் நிதி அகர்வாலுக்கு பாராட்டு தெரிவித்து தைரியத்தை பாராட்டி வருகிறார்கள்.