கணவர் கிட்ச்லு – வை திருமணம் செய்த கொண்ட பிறகும் முன்னணி நடிகர் ஒருவர் மீது crush இருந்தாக சொன்ன காஜல் அகர்வால்.! வைரலாகும் வீடியோ.

kajal-agarwal
kajal-agarwal

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சினிமாவுலகில் சிறப்பான கதை அம்சமுள்ளவற்றைத் தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் வெகு விரைவிலேயே சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களுடனும் நடித்து தனக்கான இடத்தை மிகப்பெரிய அளவில் பரப்பி கொண்டார்.

இப்படி வந்து கொண்டிருந்த இவர் தனது நெருங்கிய நண்பரான கவுதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது சினிமாவில் நடிப்பதை தவிர்த்து விட்டு கணவனுடன் வெளிநாடு களில் ஊர் சுற்றி பொழுதை கழித்து வருகிறார்.

இவர் தமிழில் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கியுள்ள லைவ் டெலிகாஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் அகர்வாலிடம் தமிழ் சினிமாவில் உங்களுக்கு யார் மீது crush என்ற கேள்வி எழுப்பினர்.

அதிலும் ஆப்ஷனாக  இரண்டு முன்னணி நடிகர்கள் தான் தலயா.? தளபதியா.? என்று கேட்டுள்ளனர்.

சற்றும் யோசிக்காமல் நடிகை காஜல்அகர்வால் தளபதி விஜய்யை தேர்ந்தெடுத்தார்.

இதோ அந்த அழகிய வீடியோ.