தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காஜல்அகர்வால் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அந்தவகையில் இவர் தளபதி விஜய்யுடன் ஜில்லா திரைப்படத்திலும் நடிகர் தனுஷுடன் மாரி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தான் திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அதற்கு தகுந்தார்போல் காஜல்அகர்வால் சமீபத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் அவர் நடிக்க இருந்த தி போஸ்ட் என்ற திரைப்படத்தில் கூட அவருக்கு பதிலாக வேறு ஒரு கதாநாயகியை நடிக்க வைத்துள்ளார்கள் அத்திரைப்படத்தின் படக்குழுவினர்கள். மேலும் நடிகை ஹன்சிகா நடித்துக் கொண்டிருக்கும் ரவுடி பேபி என்ற திரைப்படத்தில் கூட முதலில் காஜல் தான் நடிக்க இருந்தாராம்.
ஆனால் காஜல் நடிக்க முடியாததன் காரணமாக தான் ஹன்சிகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு காஜல் தொடர்ந்து திரைப்படத்தை தவிர்த்து வருவதன் காரணமாக நிஜமாகவே கர்ப்பமாக இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.
பொதுவாக சினிமாவில் இருக்கும் பிரபலமான நடிகைகள் திருமணம் முடிந்து விட்டால் அவர்களுடைய வாழ்க்கை முடிந்தது போல தான் அந்த வகையில் தற்போது காஜல் அகர்வால் இனிமேல் திரைப் படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே குறைந்து விட்டது.