தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு பூரிப்படைந்த காஜல் அகர்வால். வாழ்த்தும் ரசிகர்கள்.

kajal
kajal

நடிகை காஜல்அகர்வால் ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்து பின்பு தமிழில் பழனி திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் மாற்றான், விஜய்யுடன் ஜில்லா, அஜித்துடன் விவேகம் போன்ற டாப் நடிகர்களின் படங்களில் ஜோடி போட்டு நடித்து தமிழில் பிரபலமடைந்து முன்னணி நடிகையாக மாறியவர்.

இப்படி தமிழ் தெலுங்கு என அனைத்து மொழி திரைப்படங்களிலும் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்த காஜல்அகர்வால் ஒருகட்டத்தில் தனது நண்பரும் தொழிலதிபருமான கௌதம் கிச்சலு இருவரும் காதலித்து பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகியதையடுத்து இருவரும் இணைந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கு இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகினர். திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த காஜல் ஒருகட்டத்தில் கர்ப்பமான நிலையில் கமிட்டான படங்களில் இருந்து விலகி உள்ளார்.

இருந்தாலும் காஜல் அகர்வால் கர்ப்பகாலத்தில் பல போட்டோ ஷுட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இப்படி இருக்கின்ற நிலையில் நேற்று ஏப்ரல் 19ஆம் தேதியன்று கவுதம் மற்றும் காஜல் அகர்வால் தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்த செய்தியை மகிழ்ச்சியாக காஜல் அகர்வால் நேற்று சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்ததை அடுத்து இன்று காஜலின் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும்  வாழ்த்துக்களையும் பெற்றுவருகின்றன. இதோ அந்த அழகிய புகைப்படம்.